» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பள்ளி மாணவி கடத்தல் ? - போலீசார் விசாரணை

புதன் 20, மார்ச் 2019 6:58:18 PM (IST)

நாகர்கோவிலில் பள்ளி மாணவி கடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில் கோட்டார் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி ஒருவர் சம்பவத்தன்று மாலை டியூசன் படிக்க சென்றாராம். ஆனால் அவர் பின்னர் வீடு திரும்பி வரவில்லை. அவர் எங்கு சென்றார் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. மாணவியை அவரது பெற்றோர் பல இடங்களிலும் அவரை தேடி உள்ளனர். 

மேலும் உறவினர்கள் வீடுகளிலும் தேடினர். இதில் வைத்தியநாதபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து மாணவியின் தந்தை கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து

அருண்Mar 20, 2019 - 11:28:38 PM | Posted IP 27.62*****

ஏமாற்றுதல்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory