» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை ? : நாகர்கோவில் கல்லூரி நிறுவனர் கைது

புதன் 20, மார்ச் 2019 6:24:42 PM (IST)

பாரா மெடிக்கல் கல்லூரி ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கில் கல்லூரி நிறுவனர் கைது செய்யப்பட்டார். 

நாகர்கோவிலை அடுத்த இறைச்சக்குளத்தில் ஒரு பாரா மெடிக்கல் கல்லுாரி அமைந்துள்ளது . இங்கு சுமார் 80 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 10 பணியாளர்கள் வேலைசெய்து வந்தனர். இந்தக் கல்லூரியின் நிறுவனர்  இரண்டு பெண் ஊழியர்களின் துணையோடு ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நிறுவனர் ரவி தனது அறைக்கு ஓர் ஆசிரியையை அழைத்து, அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அவரது அறையிலிருந்து கலங்கிய கண்களுடன் அந்த ஆசிரியை வெளியே வந்துள்ளார். இதைக் கவனித்த மாணவிகள் ஏன் அழுகிறீர்கள் என ஆசிரியரிடம் கேட்டுள்ளனர். மேலும் இதுபற்றி அந்த ஆசிரியரின் பெற்றோரிடமும் மாணவிகள் கூறியுள்ளனர். பெற்றோர் விசாரித்ததில் பாலியல் தொல்லை விவகாரம் அம்பலமாகியுள்ளது.

இதையடுத்து அந்த ஆசிரியை பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆசிரியைகள், மாணவிகளை ஏ.எஸ்.பி. ஜவகர் தலைமையில் காவல்துறையினர் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் கல்லூரியில் ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கல்லூரி நிர்வாகி கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவியதாக கல்லூரியின் இணை இயக்குநர்கள் நளினி, கலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory