» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் வளர்ப்பதற்கு தடை

புதன் 20, மார்ச் 2019 2:00:32 PM (IST)

ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது அரசால் தடை செய்யப்பட்டுள்ளது என கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், உள்நாட்டு மீன்வளர்ப்பில் இந்திய பெருங்கெண்டை மீன்வகைகளான கட்லா, ரோகு, மிர்கால் மற்றும் சீனப் பெருங்கெண்டை மீன்வகைகளான வெள்ளிக்கெண்டை, புல்கெண்டை, சாதாக்கெண்டை மற்றும்  திலேப்பியா போன்ற மீன்வகைகளை தேர்வு செய்து விவசாயிகள் மீன்வளர்ப்பு பணி மேற்கொண்டு உரிய வருவாயினை ஈட்டி வருகின்றனர்.

தற்போது, மத்திய மற்றும் மாநில அரசுகளினால் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது முழுவதுமாக தடைசெய்யப்பட்டுள்ளது. இம்மீன் இனங்கள், மற்ற மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களை அதிதீவிரமாக இரையாக உண்ணக்கூடியதும்; நமது பாரம்பரிய மீன்கள் மற்றும் வளர்ப்பு மீன்களையும் அவற்றின் முட்டைகளையும் முற்றிலுமாக அழித்துவிடும் தன்மை உடையது. ஆகையினால் நமது நீர்நிலைகளில் உள்ள அனைத்து பாரம்பரிய நீர்வாழ் உயிரினங்களும் அழியும் வாய்ப்பும் உள்ளது. 

மழை மற்றும் பெரு வெள்ள காலங்களில் இம்மீன் இனங்கள் வளர்ப்பு செய்யும் குளங்களில் இருந்து தப்பி வெளியேற வாய்ப்பு உள்ளதாலும் தப்பித்து செல்லும் மீன்கள் உள்நாட்டு நீர்நிலைகளில் மற்ற பாரம்பரிய மீன்களை முற்றிலும் அழித்து ஒரு காலகட்டத்தில் அனைத்து நீர்நிலைகளிலும் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை தவிர பிற இன மீன்கள் இல்லாமல்; உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். 

எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகளினால் தடைசெய்யப்பட்டுள்ள ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பான புகார்கள் ஏதேனும் பெறப்படின் அம்மீன்களை முற்றிலும் அழித்திட வேண்டி அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இதன் வாயிலாக அறிவுறுத்தப்படுகிறது. 

மேலும் பொதுமக்களும் இவ்வகை மீன்களை கொள்முதல் செய்திட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுவதுடன், அரசுக்கு ஒத்துழைப்பு நல்கிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆகையினால் மீன்வளத்துறை மற்றும் மீன்வள பல்கலைகழகத்தின் வாயிலாக பரிந்துரை செய்யப்படும் மீன் இனங்களை மட்டுமே வளர்ப்பு செய்து மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக சேர்ந்து அவ்வப்போது அரசு வழங்கும் சலுகைகள் வாயிலாக பயனடைந்திட இதன் வாயிலாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory