» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பறக்கை மதுசூதனப் பெருமாள் கோயில் தேரோட்டம்

புதன் 20, மார்ச் 2019 11:19:53 AM (IST)

நாகர்கோவில் அருகேயுள்ள பறக்கை மதுசூதனப் பெருமாள் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

நாகர்கோவிலை அடுத்த பறக்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு மதுசூதனப் பெருமாள் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் பங்குனிப் பெருந்திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு திருவிழா கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15 ஆம் தேதி மாலை கருடனுக்கு கண் திறந்து பெருமாள் காட்சியருளல் நிகழ்ச்சியும், 16 ஆம் தேதி உற்சவபலி, மரப்பாணி பூஜையும், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17)  பெருமாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும், மார்ச் 18 ஆம் தேதி இரவு 7 மணியளவில் நடராஜமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர். இந்நிகழ்ச்சியில் பறக்கை, நாகர்கோவில், தெங்கம்புதூர், புத்தளம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory