» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆம்னி பேருந்தில் பயணியிடம் ரூ.34 லட்சம் பறிமுதல்

புதன் 20, மார்ச் 2019 10:42:16 AM (IST)

மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பேருந்தில் வந்த பயணியிடம் ரூ. 34.08 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு பறக்கும்படையினர் வாகன சோதனைகள் நடத்தி வருகின்றனர். இதில் மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த ஆம்னி பேருந்தில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். இதில், ஒரு பயணியிடம் 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. அவற்றை எண்ணிப் பார்த்ததில், ரூ. 34.08 லட்சம் இருந்தது தெரியவந்தது. அவரிடம் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாதால், பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில், பணத்தை கொண்டு வந்தவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது கபிலுதீன் (31) என்பது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் வட்டாட்சியர் அனில்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பிறகு மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதால், இது தொடர்பாக வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விசாரணை நடத்தும்போது, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory