» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை அகற்ற கெடு

செவ்வாய் 19, மார்ச் 2019 7:20:31 PM (IST)

திங்கள் நகர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை அகற்ற வரும் 23ஆம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை நகரில் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இது சுமார் 25 ஆண்டுகள் பழமையானதால் அங்கு உள்ள வணிக வளாகங்கள் கடைகள் உள்ளிட்ட கட்டடங்கள் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றன. எனவே புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. 

இந்நிலையில் திங்கள் நகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தமிழக அரசு 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.  அங்கு பணிகள் நடைபெறும் நிலையில் சில கடைகள் காலி செய்யப் படாமல் இயங்கி வருகின்றன. அந்த கடைகளை காலி செய்ய பேரூராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இதில் வரும் 23ம் தேதிக்குள் கடைகளை காலி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory