» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்டஆட்சியர் முக்கிய அறிவிப்பு

செவ்வாய் 19, மார்ச் 2019 6:57:58 PM (IST)

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை கிராம நிர்வாக அலுவலர்களிடம் விபரம் தெரிவிக்க வேண்டுமென கன்னியாகுமரி மாவட்டஆட்சியர் பிரசாந்த்வடநேரே தெரிவித்துள்ளார்.

நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் 2019-யினை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அனைவரும் விடுபடா வண்ணம் தேர்தலில் வாக்களிக்க தங்கள் வசம் உள்ள வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை தங்கள் இருப்பிடம் அருகாமையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது உதவியாளர்கள் மூலமாகவோ சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் விபரம் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மேலும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடமிருந்து படிவம் 6 பெற்று அப்படிவத்தில் புகைப்படத்துடன் விபரங்களை பூர்த்தி செய்து கிராம நிர்வாக அலுவலர்களிடம் வசம் ஒப்படைக்கவும். இது தொடர்பாக மேலும் விபரங்கள் அறிய மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அவசர தேர்தல் தொலைபேசி எண் 1950-ல் தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்வடநேரே தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory