» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருப்பம் : போலீசில் பரபரப்பு வாக்குமூலம்

செவ்வாய் 19, மார்ச் 2019 6:11:56 PM (IST)

கன்னியாகுமரியில் சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அக்கா மகனை பழிவாங்கவே சிறுவன் கொடூர கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் கெபின் ராஜ் (35). மங்களூருவில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சரண்யா இத்தம்பதியின் மகன் ரெய்னா (4).  கெபின் குடும்பச் செலவுக்காக தனது தாய்மாமனான அந்தோணிச்சாமி (37) என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினாராம். ஆனால் அந்த கடனை திருப்பிச் செலுத்துவதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் சம்பவத்தன்று காலை கெபின் மகன் ரெய்னாவை அந்தோணிசாமி கடத்தி சென்று தென்னந்தோப்பு தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார். பின்னர் அவர் தப்பிச் செல்லும்போது தனிப்படை போலீசார் பிடித்தனர். போலீசில் அந்தோணிசாமி அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது கெபின் ராஜ் என்னிடம் வாங்கிய ஒரு லட்சம் பணத்தை ஒரு பகுதியை மட்டுமே தந்தார். 

மீதி தொகையை தராமல் காலம் கடத்தி வந்தார். இதனால் அவரை பழிவாங்க அவரது மகனை கடத்த முடிவு செய்தேன். எனது மகன் மூலம் சரண்யாவின் மகனை அழைத்து வந்தேன். எனது மகனும் ரெய்னாவும் சிறிது நேரம் வீட்டில் விளையாடினர். பின்னர் ரெய்னாவை நோக்கி அழைத்துச் சென்று ஒரு தென்னந்தோப்பில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தேன். பின்னர் சென்னை தப்ப முயன்ற போது போலீசார் என்னை பிடித்து விட்டனர் என கூறியுள்ளார். இச்சம்பவத்தால் அங்கு எதுவும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory