» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

விற்கப்படும் ஒவ்வொரு வாக்கின் மையும் பொய்மை : நாகர்கோவிலில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வெள்ளி 15, மார்ச் 2019 1:26:41 PM (IST)
நாடாளுமன்ற தேர்தல்  2019-ல்  விற்கப்படும் ஒவ்வொரு வாக்கின் மையும் பொய்மை என்கின்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை, தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே  வாகனங்களில் ஒட்டி, விழிப்புணர்வை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- தேர்தலில் வாக்களிப்பதற்கு விழிப்புணர்விற்காக விற்கப்படும் ஒவ்வொரு வாக்கின் மையும் பொய்மை  என்கின்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை, தமிழ்நாடு அரசு பேருந்துகள், தனியார் ஆட்டோ மற்றும் வாடகை கார்களில் ஒட்டப்படுகிறது. 

வாக்காளர்களாகிய நாம் வாக்களிப்பது மட்டுமல்லாது, நம் அயலகத்தாரையும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வாக்காளர்கள் தங்கள் குறைகளை  1950 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். மாவட்டத்தில் மொத்தம்   6 தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படை குழுவினர் நியமிக்கப்பட்டு, சுழற்சி முறையில் 24 மணிநேரமும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

பொது இடங்களிலும் மற்ற பிற இடங்களிலும் பொது மக்கள் பார்வையில் படும்படி உள்ள அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள், கட்சி சார்ந்த சுவர் விளம்பரங்கள், பிளக்ஸ் போர்டுகள், கொடிகள், கொடிகம்பங்களில் உள்ள கட்சி வண்ணங்கள் ஆகியவற்றை தனியார்கள் தானாக முன்வந்து 72 மணி நேரங்களுக்குள்ளாக அகற்ற உரிய அறிவுரைகள் 11.03.2019 அன்று வழங்கப்பட்டது. மேலும், முன் அனுமதி பெறாமல் வாகனங்களில் கட்சி கொடிகள், போஸ்டர்கள் பயன்படுத்தினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டது. 

தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாத 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், சார் ஆட்சியர் (நாகர்கோவில்)விஷ்ணு சந்திரன் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பிச்சை, அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் திருவம்பலம்பிள்ளை, வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory