» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தேர்தல் குறித்த அரசு அலுவலர்களுக்குப் பயிற்சி

வெள்ளி 15, மார்ச் 2019 12:14:50 PM (IST)

மக்களவைத் தேர்தலையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறை அரசு அலுவலர்களுக்கான பயிற்சி நாகர்கோவிலில்   நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை வகித்தார்.  மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரேவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  சுகன்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், 117 மண்டலக் குழுக்களைச் சேர்ந்த அலுவலர்கள், அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு நடத்தை மாதிரி குறியீடு மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன. தேர்தல் விதிமுறை மீறல் குறித்து புகாரளிக்க தேர்தல் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. 

இக்கட்டுப்பாட்டு அறையை 18005998010,  04652 -225564 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். மேலும், தேர்தல் தகவல் தொடர்பு மைய தொலைபேசி எண் 1950 -ஐ தொடர்பு கொண்டு, தேர்தல் தொடர்பான தகவல் மற்றும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என முகாமில் தெரிவிக்கப்பட்டது. மேலும்,  உதவி செலவின கண்காணிப்பாளர், கணக்கியல் குழு, விடியோ கண்காணிப்புக் குழு, செலவின கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த அலுவலர்களுக்கும் தேர்தல் செலவினம் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory