» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பயணிகளிடம் பணம் பறிப்பு: 2 பேருக்கு பொதுமக்கள் தர்மஅடி

வெள்ளி 15, மார்ச் 2019 10:27:52 AM (IST)

நாகர்கோவிலில் பயணிகளிடம் பணத்தை திருடியதாகக் கூறி இரண்டு நபர்களை பிடித்த பொதுமக்கள் அவர்களை  அடித்து உதைத்தனர்.

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில், பயணிகளிடம் இரண்டு நபர்கள் பணம் திருடியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிபோதையில் இருந்த அந்த இரண்டு நபர்களையும் பிடித்து அடித்து உதைத்தனர். மேலும் அவர்கள் தப்பித்துவிடாதபடி பேருந்து நிலையத்திலேயே முடக்கியும் வைத்தனர்.

அப்போது அந்த கூட்டத்திலிருந்த ஒருவர் அந்த போதை ஆசாமிகளுக்கு சாதகமாக பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த நபரையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதையடுத்து தகவல் அறிந்துவந்த காவல்துறையினரிடம் அந்த நபர்கள் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் சில மணி நேரம் பரபரப்பு நிலவியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory