» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பகவதியம்மன் கோயிலில் ரூ.36 லட்சம் உண்டியல் வசூல்

வியாழன் 14, மார்ச் 2019 8:20:11 PM (IST)

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ரூ. 36.75 லட்சம் உண்டியல் பணம் வசூலானது.

குமரி மாவட்டத்தில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில்  மாசிக்கொடை விழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12ம் தேதி நள்ளிரவு ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது. பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக சுமார் 20 உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த  உண்டியல்கள் அனைத்தும் கோயில் இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. 

முதுநிலை கணக்கர் இங்கர்சால், காண்காணிப்பாளர் ஜீவானந்தம், ஆய்வாளர் கோபாலன்,காரியம் ஆறுமுகதரன், மராமத்து பொறியாளர் ஐயப்பன், குழித்துறை தேவிகுமாரி மகளிர் கல்லூரி மாணவிகள்  ஆகியோர்  காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், ரொக்கமாக ரூ.36.75 லட்சம், 37.100 கிராம் தங்கம், 715.150 கிராம் வெள்ளி, மலேசிய ரிங்கிட் 100, சவூதி ரியால் 11 ஆகியவை இருந்தது. இது பிப்ரவரி 1ம் தேதி முதல் மார்ச் 12ம் தேதிவரை பக்தர்கள் செலுத்திய காணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory