» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி வந்த ராகுல்காந்திக்கு கறுப்புகொடி : 125 பேர் மீது வழக்கு

வியாழன் 14, மார்ச் 2019 7:40:01 PM (IST)

ராகுல்காந்திக்கு எதிராக கறுப்பு கொடி காட்டிய அர்ஜூன் சம்பத் உள்பட 125 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். 

நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நேற்று நடந்தது. இந்  அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். குமரிக்கு வரும் ராகுல்காந்திக்கு கறுப்புக்கொடி காட்டப்படும் என இந்து மக்கள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று அஞ்சுகிராமம் சந்திப்பில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் ராகுல்காந்தி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 

இந்த நிலையில் அனுமதி இன்றி கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட 119 பேர் மீது அஞ்சுகிராமம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ராகுல்காந்தி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதீய ஜனதா இளைஞரணி மாவட்ட செயலாளர் அருள் சிவா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட அருள்சிவா உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory