» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பூதப்பாண்டியில் நோயால் அவதிப்பட்டவர் தற்கொலை

வியாழன் 14, மார்ச் 2019 6:56:40 PM (IST)

பூதப்பாண்டியில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே காட்டுப்புதூர் அண்ணாநகரை சேர்ந்தவர் ராஜாமணி. கூலி தொழிலாளியான இவர் வயிற்றுவலியால் அவதியடைந்து வந்தார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதனால் மனம் உடைந்த அவர் சம்பவத்தன்று விஷமருந்தி மயங்கி விழுந்தார். 

உடனே அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைச்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory