» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஸ்லோகன் போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் : வசந்த்அன்கோ நிறுவனம் வழங்கியது

வியாழன் 14, மார்ச் 2019 6:33:32 PM (IST)வசந்த் அன் கோவின் 41வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஸ்லோகன் போட்டி மூலம் வெற்றி பெற்ற தூத்துக்குடியை சேர்ந்த ரவிக்குமார் குடும்பத்தினருக்கு வசந்த் அன் கோ முதன்மை அதிகாரி சண்முக சுந்தரம் மாருதி காரை பரிசாக வழங்கினார்.

வசந்த் அன் கோவின் 41வது ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த 01-06-2018 முதல் 31-08-2018 வரை ஸ்லோகன் கான்டஸ்ட் மூலமாக பரிசுகளை வென்ற வாடிக்கையாளர்களான தூத்துக்குடி ராஜிவ்நகரை சேர்ந்த ரவிக்குமார் குடும்பத்தினருக்கு முதல் பரிசாக மாருதி காரும் இரண்டாவது பரிசாக சகாயமாதா பட்டினம் சேர்ந்த மொகைதீன் சம்சுதீன் குடும்பத்தினருக்கு எல்.இடி டிவி, 3வது பரிசாக புதுக்கோட்டை சேர்ந்த ஹெர்குலஸ் குடும்பத்தினருக்கு ஃபிரிட்ஜ், 4வது பரிசாக நாசரேத் சேர்ந்த வல்லபாய் ராஜய்யா குடும்பத்தினருக்கு மைக்ரோவேவ் ஓவன், 5வது பரிசாக புதுகிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு கேஸ் ஸ்டவ், 6வது பரிசாக குளத்தூரை சேர்ந்த ஆனந்தகுமார் குடும்பத்தினருக்கு ஃபேன், 7வது பரிசாக அண்ணாநகரை சேர்ந்த மாரிமுத்து குடும்பத்தினருக்கு வாட்டர் ப்யூரிஃபையர் பரிசாக வழங்கப்பட்டது. 

இந்த பரிசுகளை தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் உள்ள வசந்த் அன் கோ கிளையில் வைத்து வசந்த் அன் கோ முதன்மை அதிகாரி சண்முக சுந்தரம் ஏழு குடும்பத்தினருக்கு வழங்கினார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி வசந்த் அன் கோ கிளை மேலாளர் ஜெயக்குமார், மற்றும் ஊழியர்கள் டேனியல், கணேஷ், முனியசாமி, ராம சண்முகம், ஜெயந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

ANTONYMar 14, 2019 - 06:54:39 PM | Posted IP 162.1*****

SUPER CONGRATULATION VASANTH&CO TUTICORIN

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory