» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பேப்பரில் மினியேச்சர் வடிவங்கள் செய்து அசத்தல் : தூத்துக்குடி இளைஞரின் புது முயற்சி

வியாழன் 14, மார்ச் 2019 2:07:56 PM (IST)தூத்துக்குடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் நாம் சாதாரணமாக பயன்படுத்தும் ஏ 4 பேப்பர், மற்றும் செய்திதாள்களிலேயே பிரபல கட்டிடங்கள், கோவில்களை மினியேச்சர் செய்து ஆச்சரியப்படுத்துகிறார்.

தூத்துக்குடி லயன்ஸ்டவுன் பகுதியினை சேர்ந்த நிக்கோலஸ் முருகன், அல்போன்சா மேரி தம்பதியினரின் ராஜா (40). தற்போது குவைத் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். பள்ளிப்படிப்பு முடித்துள்ள இவரது திறமை அசாத்தியமானது. அதாவது நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஏ 4 பேப்பர், மற்றும் செய்திதாள்களை மட்டுமே பயன்படுத்தி பிரபல கட்டிடங்கள், கோவில்களை மினியேச்சர் செய்தும் அலங்காரப்பொருட்கள் செய்தும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகின்றார்.

இது குறித்து ராஜா கூறியதாவது, எனது தந்தை நிக்கோலஸ் முருகன் கிறிஸ்துமஸ் குடில்களை அவரே செய்வது வழக்கம். அதை சிறுவயதிலிருந்தே பார்த்ததால் எனக்கும் அது போன்று செய்ய வேண்டுமென ஆசை ஏற்பட்டது. 6வது படிக்கும் போது பேப்பரில் வித்தியாசமாக செய்து பரிசு பெற்றுள்ளேன். தற்போது பணிக்கு வந்து விட்டாலும் பேப்பரிலேயே வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

அதன் விளைவாக 98 சதவிதம் ஏ 4 பேப்பர், செய்திதாள் மீதி 2 சதவிதம் போம் கொண்டு ஈபிள் டவர், தொப்பி, ராக்கெட்,தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு மினியேச்சர்கள் செய்தேன். நான் தினசரி பிரபலமான புர்ஜ் கலிபா கட்டடம் வழியே பணிக்கு செல்வேன். அவ்வாறு செல்லும் போது அதை பார்த்து பார்த்து மனதில் வைத்து கொண்டே புர்ஜ் கலிபா கட்டடத்தின் மினியேச்சர் செய்தேன். இந்த கலையை எனக்கு யாரும் கற்று தரவில்லை. நானே எனது சொந்த முயற்சியில் கற்று கொண்டேன். எனது இந்த முயற்சியை எனது நிறுவனத்தில் பலரும் பாராட்டியுள்ளனர் . இதன் அடுத்த கட்டமாக மினியேச்சர் வடிவங்கள் செய்வதில் உலக சாதனைக்காக முயற்சி செய்து வருகிறேன். நான் செய்தவற்றை கண்காட்சியாக வைக்க உள்ளதாக கூறிய அவர், இது என்னுடன் முடிந்து விடக்கூடாது. அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும். அதற்காக மாணவ மாணவிகளுக்கும் இதை கற்று தர விரும்புகிறேன். நான் செய்யும் இந்த மினியேச்சர்கள் சுற்றுப்புற சூழலை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டது. இவற்றை பூமியில் போட்டாலும் அவை வெறும் பத்தே நாளில் மக்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.

தான் இதை சாதிக்க உதவியதற்கு கடவுளுக்கும் தனது தந்தைக்கும் முக்கியமாக நன்றி தெரிவிப்பதாகவும் மேலும் என்னை ஊக்கப்படுத்திய எனது தாயார், உடன்பிறந்தவர்கள், நண்பர்கள் தான் படித்த சகாயமாதா பள்ளி மற்றும் லசால் பள்ளி ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக ராஜா குறிப்பிட்டார். 9ம்  வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் தனது வித்தியாசமான யோசனையாலும், முயற்சியாலும் சாதித்துள்ள ராஜாவிற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து

ஜெகன்Mar 19, 2019 - 09:41:31 AM | Posted IP 172.6*****

வாழ்த்துக்கள் மச்சான்.. நீ என் பள்ளி தோழுன் என்பதில் எனக்கு பெருமை.

BenagasMar 17, 2019 - 09:40:07 PM | Posted IP 172.6*****

Super machan

ஆன்றோ மீனவன்Mar 17, 2019 - 03:32:10 PM | Posted IP 172.6*****

வாழ்த்துக்கள் அண்ணா

JudebinaMar 15, 2019 - 09:32:28 PM | Posted IP 172.6*****

Congratulations

NiranjanMar 15, 2019 - 02:20:19 PM | Posted IP 172.6*****

Really great anna congrats

நிஹாMar 15, 2019 - 01:32:38 PM | Posted IP 172.6*****

வாழ்த்துக்கள்.

VenkatMar 15, 2019 - 12:44:03 PM | Posted IP 172.6*****

Way to go Chithapa.World record is not so far u gonna win and rock this world.

JesuMar 14, 2019 - 05:56:00 PM | Posted IP 162.1*****

Congrats Raja

EswariMar 14, 2019 - 05:24:38 PM | Posted IP 162.1*****

Congratulation brother- in-law

ARUMUGA PRABUMar 14, 2019 - 04:31:51 PM | Posted IP 162.1*****

CONGRATZ.....

jeyakumarMar 14, 2019 - 04:05:27 PM | Posted IP 162.1*****

God bless you dear brother..

Sankar TamilselviMar 14, 2019 - 03:42:59 PM | Posted IP 172.6*****

Congratulations brother.

மலா்Mar 14, 2019 - 03:36:53 PM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள் சகோ

மாலதிMar 14, 2019 - 03:36:11 PM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள் ராஜா

HumanMar 14, 2019 - 03:28:24 PM | Posted IP 162.1*****

Congrats.. super

ஒருவன்Mar 14, 2019 - 02:28:17 PM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory