» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தேர்தலில் வைகோவை ஆதரித்து பிரசாரம் செய்வேன் : நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேட்டி

சனி 23, பிப்ரவரி 2019 1:41:05 PM (IST)

இந்த தேர்தலில் வைகோவை ஆதரித்து பிரசாரம் செய்வேன் என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். 

நாஞ்சில்சம்பத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, பாஜக அதிமுக கூட்டணி அஸ்தமனமாக அமையும். இனி இவர்கள் வெற்றி பெற போவதில்லை.  அதிமுக. தென்தமிழகத்தின் கவுரவத்தை விட்டுக் கொடுத்து விட்டது என கருதுகிறேன் . பா.ம.க.வை கூட்டணியில் சேர்த்ததால் அதிமுக.வின் தொண்டர்கள் மட்டுமல்ல, மக்களும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். தமிழகத்தின் புது வாக்காளர்கள் கோபத்தின் உச்சத்தில் உள்ளனர்.

ரஜினிகாந்த் தனது படங்கள் வெளிவரும் போது அவர், அரசியல் கருத்துக்கள் பேசுவார். படம் வெளியாகும். அது வெற்றி பெறும். அதன் பிறகு அவரும் அமைதியாகி விடுவார். அரசியல் பேச்சும் காணாமல் போய் விடும். ரஜினி தன்னை குழப்பி, ரசிகர்களையும் மட்டுமின்றி தமிழக மக்களையும் குழப்பி வருகிறார்.இந்த தேர்தலில் காங்கிரஸ் நிச்சய வெற்றி பெறும். பிரதமராக ராகுல்காந்தி பதவி ஏற்பார். இவ்வாறு அவர் கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory