» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் மாபெரும் புத்தகக் கண்காட்சி : மாவட்டஆட்சியர் தகவல்

திங்கள் 11, பிப்ரவரி 2019 6:15:43 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் இணைந்து கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் உறுதுணையுடன் நடத்தும் மாபெரும் புத்தகக் கண்காட்சி பிப்ரவரி 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடப்பதாக  மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்  வடநேரே தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழக அளவில் கல்வி அறிவு அதிகம் பெற்ற மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் பொது அறிவினை வளர்த்திடவும், தாங்கள் ஈடுபட்டுள்ள தொழிலை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை கையாளவும், பள்ளி மாணவ, மாணவியர்களின் கல்வி அறிவை பெருக்கி, அவர்களது எதிர்கால வாழ்க்கைக்கு ஏற்ற கல்வியினை உறுதிபடுத்திடவும், அதற்கான வழிகாட்டியாக அமைந்திடவும், கன்னியாகுமரி மாவட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் ரூ பதிப்பாளர் சங்கம் இணைந்து கன்னியாகுமரி மாவட்ட  நிர்வாகத்தின் உறுதுணையுடன் நடத்தும், மாபெரும் புத்தகக் கண்காட்சி, நாகர்கோவில், அனாதைமடம் மைதானத்தில் பிப்ரவரி 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

புத்தகக்கண்காட்சி மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- தனிமனிதன் வாழ்வின் வெற்றிக்கு புத்தகம் வாசித்தல் அவசியம் என்பதை மனதில் கொண்டு வாசிப்பை நேசிப்போம் என்ற வாசகத்துடன் 10 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் அனைத்து பொதுமக்களும் கலந்துக் கொண்டு பயன்பெற வேண்டும். ஒவ்வொரு நாளும் சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறந்த எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், பேச்சாளர்கள் இக்கண்காட்சியில் கலந்து கொள்ள வருகை தருவதால் இந்த சிறப்பான வாய்ப்பினை மக்கள், மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

இதில் முக்கியமாக பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொள்வதன் மூலம் புத்தகம் வாசிக்கும் திறன் அவர்களிடையே மேம்படும், பெற்றோர்கள், ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை இக்கண்காட்சியில் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கி பயன்பெறுமாறு அறிவுறுத்த வேண்டும். இக்கண்காட்சிக்காக அரசு அதிகாரிகள் மற்றும் எழுத்தாளர்கள் கொண்டு குழு ஏற்படுத்தப்பட்டு அதில் இக்கண்காட்சிக்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

எழுத்தாளர்களுக்கோ, அரங்கு அமைப்பாளர்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் இக்குழுவினை அணுகி தங்கள் குறைகளை தீர்த்துக் கொள்ளலாம். இப்புத்தகக் கண்காட்சிக்கான அனுமதி இலவசம். அனைத்து மாணவ, மாணவியர்களும், பொதுமக்களும், தொழில் முனைவோர்களும் இக்கண்காட்சியில் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கி பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory