» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆரல்வாய்மொழி அருகே அடுத்தடுத்து விபத்து - 2 பேர் பலி

திங்கள் 11, பிப்ரவரி 2019 6:06:26 PM (IST)

 ஆரல்வாய்மொழி அருகே அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியாகினர். 

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிகரசுதன் (34). மெக்கானிக். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு 6 மாத கைக்குழந்தை உள்ளது. நேற்று ஆரல்வாய்மொழியில் இருந்து நாகர்கோவிலுக்கு பொருட்கள் வாங்க மோட்டார் பைக்கில் வந்திருந்தார். பொருட்கள் வாங்கி விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். வெள்ளமடத்தை அடுத்த விசுவாசபுரம் வரும்போது எதிரே வந்த வேன் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஹரிகரசுதன் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory