» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அஞ்சுகிராமம் அருகே கார் விபத்து காங்கிரஸ் பிரமுகர் பலி

திங்கள் 11, பிப்ரவரி 2019 12:20:22 PM (IST)

அஞ்சுகிராமம் அருகே காங்கிரஸ் நிர்வாகி கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். 

நெல்லை மாவட்டம் தென்தாமரைகுளம் அருகே உள்ள எட்டுகூட்டு தேரிவிளை பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (50). இவர் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார். தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவராகவும்  பதவி வகித்து உள்ளார்.

தொழில் வி‌ஷயமாக பாலச்சந்திரன் அவசரமாக நெல்லை செல்ல வேண்டியது இருந்தது. இதனால் அவர் இன்று தனது குடும்பத்தினரிடம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு புறப்பட்டு தயாராக இருக்கும்படியும், தான் காலையிலேயே நெல்லைக்கு சென்றுவிட்டு வந்துவிடுவதாகவும் கூறி விட்டு  தனது காரில் இன்று காலை பாலச்சந்திரன் திருநெல்வேலிக்கு புறப்பட்டார்.அஞ்சுகிராமம் அருகே 4 வழிச்சாலையில் காரில் பாலச்சந்திரன் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வாழை தோட்டம் பகுதியில் சென்ற போது திடீரென கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

அதன்பிறகு அங்கிருந்த போலீஸ் தடுப்பு மீது அந்த கார் மோதியது. இதன் பிறகு தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் சாலையோரத்தில் 10 அடி பள்ளத்தில் இருந்த வாழை தோட்டத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பாலச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் அஞ்சு கிராமம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.இறந்தவர் உடலை பிரேத பரிசோதனைக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பாலச்சந்திரனுக்கு பூங்கோதை என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory