» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ரப்பர் மரம் விழுந்ததில் காயமடைந்த பள்ளி ஆசிரியர் சாவு

திங்கள் 11, பிப்ரவரி 2019 10:52:15 AM (IST)

குலசேகரம் அருகே ரப்பர் மரம் விழுந்ததில் பலத்த காயமடைந்த பள்ளி ஆசிரியர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் திருநந்திக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (35) . இவர் களியல் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு குத்தகைக்கு எடுத்திருந்த ரப்பர் தோட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. சென்ற 5ம் தேதி தோட்டத்தில் உள்ள ரப்பர் மரங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் வெட்டும் பணி நடைபெற்றதாம். அப்போது இவர் மீது ஒரு மரம் சாய்ந்து விழுந்துள்ளது.

இதில் பலத்த காயமடைந்த அவர் திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து குலசேகரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory