» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் கிராம்பு அறுவடை தீவிரம்: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை

திங்கள் 11, பிப்ரவரி 2019 10:26:02 AM (IST)

குமரி மாவட்டத்தில் விளையும் முக்கிய நறுமணப் பயிரான கிராம்பு அறுவடை தீவிரமடைந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலமோர் மற்றும் மாறாமலை, சீபீல்டு, காரிமணி, இஞ்சிக்கடவு, கரும்பாறை, வேளிமலை, உள்ளிமலை, ஆறுகாணி, பத்துகாணி, கொண்டைகட்டி மலை,  மேல் கோதையாறு, கீழ் கோதையாறு உள்ளிட்ட இடங்கள் கிராம்பு அதிகமாக விளைகிறது. ஏறக்குறைய  ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் இங்கு கிராம்பு பயிரிடப்படுகிறது.  கறிமசாலா, பிரியாணி, கேக், பிஸ்கெட் உள்ளிட்ட உணவுப் பதார்த்தங்களில் கிராம்பு சேர்க்கப்படுகிறது. 

கிராம்பு மொட்டுகள், இலைகள் மற்றும் தண்டுகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், பற்பசை, சோப்பு உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம்பு அறுவடை பணி தீவிரமடைந்துள்ளது.  உள்ளூர் தொழிலாளர்களுடன் புதுக்கோட்டை மற்றும் வடகிழக்கு மாநிலத் தொழிலாளர்களும் கிராம்புத் தோட்டங்களில் முகாமிட்டு கிராம்பு அறுவடைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிராம்பின் விலை கடுமையாக சரிந்து வருவதால் விவசாயிகள் கவலைக்குள்ளாகியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு கிலோ உலர்ந்த கிராம்பின் விலை ரூ. 900 வரை இருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு இதன் விலை கிலோவுக்கு ரூ. 750ஆக சரிந்தது. இந்நிலையில், தற்போது இதன் விலை கிலோவுக்கு ரூ. 600ஆக குறைந்துள்ளது. இதர பயிர்களைப் போலில்லாமல் கிராம்பு மரங்களைப் பராமரிக்கும் செலவினங்களும், தொழிலாளர்களுக்கான செலவினங்களும் அதிகமாக உள்ளதால் விலைவீழ்ச்சியானது கிராம்பு விவசாயிகளை கடுமையாகப் பாதிக்கச் செய்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory