» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி வடக்கு ரதவீதி முத்தாரம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா

ஞாயிறு 10, பிப்ரவரி 2019 1:07:48 PM (IST)தூத்துக்குடி வடக்குரத வீதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்தாரம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்குரத வீதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்தாரம்மன் கோவில் மகா கும்பாபிஷேக இன்று காலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 7ம் தேதி பூஜை மஹாகணபதி பூஜையுடன் யாக சாலை தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற்றன. 

இன்று காலை ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் கோபுர கலசத்திற்கும் விநாயக பெருமானுக்கும், மூலஸ்தான அம்பிகைக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12ஆண்டு களுக்கு பின்னர் நடைபெற்ற கும்பாபிஷேகத்தை தூத்துக்குடி சிவன் கோவில் சங்கர பட்டர், திருச்செந்தூர் குமார் பட்டர் ஆகியோர் நடத்தி வைத்த‌னர். விழாவில் பெருங்குளம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சார்ய சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். தொடர்ந்து இன்று காலை அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  இன்று மாலை முத்தாரம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம், நவசக்தி அர்ச்சனை, தீபாராதனை வழிபாடு நடைபெறுகிறது. இரவு முத்தாரம்மன், திருவீதி உலா வரும் நிகழ்ச்சி அர்ச்சகர் பத்மநாதாபன் தலைமையில் நடக்கிறது. 

நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி எம்எல்ஏ., கீதாஜீவன், வஉசி கல்லுாரி செயலாளர் ஏபிசிவி சண்முகம், வஉசி பேரவை தலைவர் சரவணபெருமாள், அதிமுக மாவட்ட செயலாளர் சி.த. செல்லபாண்டியன், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், தொழிலதிபர் டிஏ தெய்வநாயகம்  உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பணி மற்றும் கும்பாபிஷேக விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து

அம்மன் அருள்Feb 10, 2019 - 03:25:14 PM | Posted IP 162.1*****

பாரம்பரியம் மறந்து, கலாச்சாரம் மறந்து, திசைமாறி சென்று...இன்று அம்மனின் அருள்பெறவந்த அணைத்து மக்களுக்கும் தாய் முத்தாரம்மன் அருள்புரியட்டும்....நெற்றியில் அம்மனின் விபூதி அணியுங்கள் ...உங்கள் வாழ்வு சிறக்கும். .....ஓம் சக்தி....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory