» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தென்தாமரைக்குளம் அருகே இளம்பெண் தற்கொலை

வெள்ளி 11, ஜனவரி 2019 5:51:22 PM (IST)

தென்தாமரைக்குளம் அருகே இளம்பெண் தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்தாமரைக்குளம் அருகே முகிலன்குடியிருப்பை சேர்ந்த சரவணன் என்பவரது மனைவி சுனிதா (24). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு திரும்பிய சுனிதா விஷம் அருந்தி மயங்கினாராம்.

இதனால் பதறிய அவரது குடும்பத்தினர் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த சுனிதாவின் தாயார் அளித்த புகாரின் பேரில் தென்தாமரைக்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory