» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த சிவலிங்கம் : சான்றிதழ் வழங்கப்பட்டது

வெள்ளி 11, ஜனவரி 2019 1:02:40 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிவ பார்வதி ஆலயத்தில் ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 111.2 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் என இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் பிடித்தது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லைப் பகுதியான உதயம்குளம்கரைப் பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க செங்கல் மஹேஸ்வர சிவபார்வதி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 2012-ம் ஆண்டு உலகில் மிக உயரமான சிவலிங்கத்தை அமைக்க இந்த ஆலயத்தின் நிர்வாகம் முடிவு செய்தது. மஹேஸ்வரானந்தா சரஸ்வதி சுவாமிகள் இந்தியாவின் பல்வேறு சிவன் கோயில்களில் சென்று அந்தக் கோயில்களின் மாதிரியைக் கொண்டு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

111.2 அடி உயரத்தில்  சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிலையிலும் தியான மண்டபங்களைக்கொண்ட இந்த சிவலிங்கத்தின் உள்ளே குகைக்குள் செல்வது போன்றும், பரசுராமர், அகத்தியர் போன்ற பல முனிவர்கள் தவம் செய்வது போன்றும், கடவுள்கள் சிற்ப வடிவமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. தரை தளத்தில் பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபடும் வகையில் சிவலிங்க சிலையும், மேல் பகுதியான எட்டாம் நிலையில் கைலாய மலையில் சிவன் பார்வதி குடிகொண்டிருப்பது போன்று அழகிய சிலையுடன் சிறந்த கட்டடக் கலையுடன் கட்டப்பட்டுள்ளது.

தற்போது கிட்டத்திட்ட 80 சதவிதம் பணிகள் நிறைவடைந்துள்ள இந்த சிலை உலகில் மிக உயரமான சிவலிங்கம் என்று தேர்வாகி, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பிடித்துள்ளது. இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு ஒருங்கிணைப்பாளர் ஷாகுல்ஹமீது தலைமையிலான அதிகாரிகள் நேற்று சிவலிங்கத்தை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory