» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் பாக்கு இழையிலான பை தயாரிப்பு மும்முரம்

வெள்ளி 11, ஜனவரி 2019 12:00:25 PM (IST)

பிளாஸ்டிக் பொருள்களுக்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், அதற்கு மாற்றாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பாக்கு மர இழையில் பைகள் தயாரிக்கும் பணி மும்முரமடைந்துள்ளது. 

ஜன 1 ம் தேதி முதல்  14 வகை பிளாஸ்டிக் பொருள்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. மாவட்டத்தில் பிளாஸ்டிக்குக்கு மாற்றாக வாழை இலைகள், காகிதப் பைகள், பாக்கு மர இழையாலான பைகள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, இம்மாவட்டத்தில் பாக்கு மரங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளதால், அவற்றிலிருந்து இழைகளைப் பிரித்தெடுத்து வெளி மாவட்டங்களுக்குக் கொண்டு சென்று,  உணவுத் தட்டுகள், குவளைகள், பைகள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு, 

இம்மாவட்ட சந்தைகளில் விற்கப்படுகின்றன. இந்நிலையில், பாக்கு இழையின் தேவை இப்போது அதிகரித்துள்ளதால், அவற்றுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக்குக்கு தடை காரணமாக பாக்கு இழைப் பைகள் மீண்டும் களத்துக்கு வந்துள்ளன. குலசேகரம் சந்தையில் விற்பனையாகும் இப்பைகள்,  மீன் வியாபாரிகளாலும், பொதுமக்களாலும் அதிகளவு வாங்கிச்செல்லப்படுகின்றன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory