» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பிளாஸ்டிக் தடையால் ஹோட்டல் தொழில் பாதிப்பு : பார்சல்கள் கொடுக்க முடியாமல் அவதி

வெள்ளி 11, ஜனவரி 2019 11:31:31 AM (IST)

பிளாஸ்டிக் தடையால் தூத்துக்குடியில் ஹோட்டல் வைத்திருப்பவர்கள் பார்சல்கள் கட்டி கொடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

ஜனவரி 1ம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்களில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டாலும் குறிப்பாக ஹோட்டல் வைத்திருப்பவர்கள் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். 

ஹோட்டல்களில் வந்து சாப்பிடுபவர்களை விட பார்சல் வாங்கி செல்பவர்களே அதிகம். மருத்துவமனையில் இருப்பவர்கள், வேலையிருப்பவர்கள் என அனைவரும் பார்சல்கள் தான் அதிகம் வாங்குவார்கள். 

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பார்சல் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பாத்திரங்கள் கொண்டு வர வேண்டும் என ஹோட்டல்களில் எழுதி வைத்துள்ளனர்.  பார்சல்கள் வாங்கி செல்வது வெகுவாக குறைந்து விட்டதால் தங்களுக்கும் பல்வேறு வகைகளில் இழப்பு ஏற்படுவதாக ஹோட்டல் வைத்திருப்பவர்கள் வேதனை தெரிவித்தனர்.

மாநகராட்சி அதிகாரிகள் அத்துமீறல் 

இது ஒருபுறமிருக்க பிளாஸ்டிக் தடை சோதனைக்கு வரும் தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் திடீரென ஹோட்டல்களுக்குள் நுழைவதாகவும் அங்கு கல்லாப்பெட்டி வரை திறந்து சோதனையிடுவதாக தெரிவிக்கும் வியாபாரிகள்  மறைத்து வைத்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த அவசியம் இல்லை என கூறினார்கள். 

மேலும் அதிக மைக்ரான்கள் கொண்ட பிளாஸ்டிக் கவர்களையும் பயன்படுத்த கூடாது என்கின்றனர். ஏற்கனவே பல பிரச்சனைகளில் தொழில்செய்து வரும் எங்களுக்கு மேலும் மேலும் நெருக்கடி கொடுத்தால் எவ்வாறு தொழில் செய்ய முடியும்? ஆகவே இந்த நடவடிக்கையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

தூத்துக்குடி காரன்Jan 13, 2019 - 12:44:47 PM | Posted IP 172.6*****

செல்வநாயகபுரம் பகுதியில் DMK சார்பாக நடைபெறும் பொங்கல் விழாவில் பிளாஸ்டிக் கட்சி கொடி கட்டியுள்ளனர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைஎடுப்பார்களா?

சாமிJan 12, 2019 - 02:06:13 PM | Posted IP 162.1*****

ஒரு நல்லது நடக்குனும்னா அப்புடித்தான்

ராஜாJan 12, 2019 - 01:13:16 PM | Posted IP 162.1*****

இதெல்லாம் ஒரு செய்தியா...

வடிவேல்Jan 11, 2019 - 05:45:34 PM | Posted IP 141.1*****

பை கொண்டு போக பழகிக்கோங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory