» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் தை திருவிழா

வியாழன் 10, ஜனவரி 2019 8:11:23 PM (IST)

பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி சிவகாமி அம்பாள் கோவில் தை பெருந்தேர் விழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

12ம் தேதி காலை 4 மணிக்கு கணபதி ஹோமம், 5 மணிக்கு நினைத்ததை முடிக்கும் விநாயகருக்கும், ஸ்ரீ பூதநாதருக்கும், சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், காலை 7.45 முதல் 8.45 மணிக்கு திருக்கொடியேற்றம் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து அன்னதானமும், மாலை 6 மணிக்கு மங்கள இசையும், 7 மணிக்கு பக்திமெல்லிசை விருந்தும், இரவு 9 மணிக்கு சுவாமியும் அம்பாளும் பூங்கோவில் வாகனத்தில் பவனி வருதலும் நடைபெறும்.

விழா நாட்களில் தினமும் பூஜையும், சுவாமி வாகனம் உலாவருதல் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். 10ம் திருவிழாவான திங்கள் கிழமை காலை 10 மணிக்கு சுவாமிக்கும் அம் பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாலை 6 மணிக்கு ஆறாட்டு வைபோக மும் இரவு 7 மணிக்கு சமூக நாடகமும், இரவு 10 மணிக்கு தெப்போற்சவமும் நடை பெறும்.இரவு 12 மணிக்கு ஸ்ரீ ஆங்கார வல்லி சப்தா வர்ணம் நடைபெறும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory