» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதல்

திங்கள் 10, டிசம்பர் 2018 11:23:10 AM (IST)

கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்கள் அய்யப்ப பக்தர்களின் சீசன் காலமாக அழைக்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் சபரிமலையில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக செல்லும் பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். இதையொட்டி நகர் முழுவதும் சீசன் கடைகள் அமைக்கப்படும். தற்போது சபரிமலையில் போராட்டங்கள் குறைந்ததை தொடர்ந்து அங்கு அதிக அளவில் பக்தர்கள் செல்ல தொடங்கியுள்ளனர். இதையடுத்து கன்னியாகுமரியிலும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

விடுமுறை தினமான நேற்று கன்னியாகுமரியில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழக அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தனர். இதனால் கோவிலில் நீண்ட வரிசை காணப்பட்டது. கடற்கரை, காந்தி மண்டபம் சாலை என எங்கு பார்த்தாலும் அய்யப்ப பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது. பக்தர்களின் வருகை காரணமாக வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory