» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இளைஞரை தாக்கி வழிப்பறி செய்த மர்மநபர்கள் : போலீஸ் விசாரணை

வியாழன் 6, டிசம்பர் 2018 6:57:59 PM (IST)

பேச்சிப்பாறை அருகே இளைஞரை தாக்கி வழிப்பறி செய்த மூகமூடி அணிந்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மார்த்தாண்டம் பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (22). இவர் ரப்பர்தோட்ட ஒப்பந்ததாரரிடம் சூபர்வைசராக பணி செய்து வருகிறார். பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க பிரகாஷ் ,குற்றியாறு பகுதிக்கு சென்றாராம். அப்போது அவரை மறித்த மூகமூடி அணிந்த மர்மநபர்கள் பிரகாசை கீழே தள்ளி அவர் வைத்திருந்த பணம் ரூ. 2500 மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்பியோடி விட்டனர். இச்சம்பவம் குறித்து பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் பேச்சிப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் பிரகாஷ் ஒரு கவருக்குள் வைத்திருந்த ரூ. 18ஆயிரம் பணம் தப்பியது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory