» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை திருட்டு

வியாழன் 6, டிசம்பர் 2018 5:51:44 PM (IST)

தக்கலை அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் நகை திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சாமிவிளையை சேர்ந்த வர்சினில் என்பவரது மனைவி ஜாஸ்மின். இவரது ஒரு வயது மகள் சம்பவத்தன்று அறையில் தூங்கி கொண்டிருந்தாராம். நள்ளிரவு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த மர்மநபர் குழந்தை கழுத்தில் கிடந்த செயின், கையில் கிடந்த வளையல் ஆகியவற்றை திருடியுள்ளார்.

மேலும் ஜாஸ்மின் கழுத்திலிருந்த நகையையும் பறிக்க முயன்ற போது அவர் திடுக்கிட்டு எழுந்து திருடன் திருடன் என கூச்சலிட்டுள்ளார் . நகையுடன் மர்மநபர் தலைமறைவாகியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory