» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு

வியாழன் 6, டிசம்பர் 2018 12:19:21 PM (IST)

பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி குமரி மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. மாவட்டம் முழுவதிலும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.குறிப்பாக பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் அதிகப்படியான போலீசார் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். மாவட்டம் முழுவதிலும் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதற்காக ரெயில் நிலையங்களில் மெட்டல் டிடெக்டர் அமைக்கப்பட்டு உள்ளது. கடல் பகுதிகளிலும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory