» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் நாளை மாற்றுத்திறனாளிகள் தினம் : மாவட்டஆட்சியர் அறிவிப்பு

வியாழன் 6, டிசம்பர் 2018 11:07:25 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் தினம் நாளை (7ம் தேதி) கொண்டாடப்படவுள்ளது என மாவட்டஆட்சியர் பிரசாந்த்வடநேரே தெரிவித்துள்ளார்.

2018 டிசம்பர் 3-ம் தேதி உலக நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்படுவதால், கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த தினத்தை வருகின்ற 7.12.2018 அன்று சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. அதன் படி, காலை 10 மணியளவில் கோர்ட் ரோட்டில் அமைந்துள்ள எஸ்எல்பி மேல் நிலைப் பள்ளியில் உள்ள அரங்கில் கலை நிகழ்ச்சியும்,மற்றும் வேப்பமூடு அருகில் உள்ள எஸ்எல்பி உயர்நிலைப் பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் சிறப்பு வங்கிக் கடன் முகாம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் , சிறப்புப் பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் பொதுமக்கள் அறியும் வண்ணம் விற்பனை கண்காட்சி மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத் திட்டம் குறித்த விழிப்புணர்வு பொருட்காட்சியும் நடைபெறவுள்ளது.எனவே, இச்சிறப்பு நிகழ்வில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory