» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நித்திரவிளை அருகே பெண்ணை மிரட்டியதாக 4 பேர் மீது வழக்கு

வியாழன் 6, டிசம்பர் 2018 10:57:37 AM (IST)

நித்திரவிளை அருகே பெண்ணை மிரட்டியதாக 4 பேர் மீது வழக்குபதியப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகேயுள்ள வைக்கல்லூர், கொல்லன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் மனைவி சாந்தினி (40). இவர் களியக்காவிளையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் பணி முடிந்து, உறவினர் ஸ்ரீஜித் என்பவரின் மோட்டார்பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, வைக்கல்லூர் பகுதியில் வைத்து வைக்கல்லூர் பந்திரெண்டு தெங்கு பகுதியைச் சேர்ந்த மாதவன்தம்பி மகன் பத்மகுமார் (39), வைக்கல்லூர் கொல்லன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தன் தம்பி மகன் நிஷாந்த் (26), அதே பகுதியைச் சேர்ந்த சோமசேகரன்தம்பி மகன் அருண்குமார் (29), ஸ்ரீகண்டன்நாயர் மகன் பிரவீன்குமார் (37) ஆகியோர் சாந்தினி வந்த பைக்கை தடுத்து நிறுத்தி, அவரை அவதூறாகள் பேசி, மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனராம்.இது குறித்து சாந்தினி அளித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory