» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வெளிநாட்டினரை கைது செய்ய வலியுறுத்தி பாஜக ஆர்ப்பாட்டம்

வியாழன் 6, டிசம்பர் 2018 10:42:03 AM (IST)

கன்னியாகுமரி  மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் புகைப்படம், விடியோ எடுத்த  பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 பேர், அவர்களுக்கு உதவியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக் கோரி, நாகர்கோவிலில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு நிறுவனமான மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கடந்த நவ. 23ஆம் தேதி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆர்தர் ரோனால்டு, ஜூல்ஸ் டேமியன் ஆகிய இருவர் புகைப்படம், விடியோ எடுத்தனர். அவர்கள் மீதும், அவர்களுக்கு உதவியதாக மணக்குடி பங்குத்தந்தை கிளிட்டஸ் மீதும் மணவாளக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர். 

உளவு பார்த்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தோருக்கும், அவர்களுக்கு உதவியவர்களையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்ய வலியுறுத்தி, நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன் கன்னியாகுமரி மாவட்ட பாஜக சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory