» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் : வானிலைமையம் எச்சரிக்கை

புதன் 5, டிசம்பர் 2018 12:41:50 PM (IST)

மழை பெய்ய வாய்ப்புள்ளதால் குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே கடல் பகுதிகளில் ஏற்படும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் புயல் காற்று, கனமழை தமிழகத்தில் பல பகுதிகளில் பெய்து வருகிறது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திகுறிப்பில், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே இன்றிலிருந்து 3 நாட்களுக்கு தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, கன்னியாகுமரி கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory