» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தாயின் இறுதிச் சடங்கிற்காக மாலை வாங்கச் சென்ற மகன் விபத்தில் பலி: தூத்துக்குடி அருகே சோகம்!!

செவ்வாய் 4, டிசம்பர் 2018 5:14:53 PM (IST)

குளத்தூர் அருகே தாயின் இறுதிச் சடங்கிற்காக மாலை வாங்கச் சென்ற மகன் பைக் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள எம் சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் குமாரவேல் மகன் சுப்பிரமணியன் (26). இவரது மனைவி மலர். இவர்களுக்கு திருமணமாகி 10 மாதங்கள் ஆகிறது. சுப்பிரமணியன் தூத்துக்குடியில் உள்ள சலூன் கடையில் வேலைபார்த்து வந்தார். நேற்று முன்தினம் அவரது தாயார் கருப்பாயி அம்மாள் உடல் நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து நேற்று அவரது இறுதிச் சடங்கிற்காக ஏற்பாடுகள் நடந்தன. 

பூமாலை வாங்குவதற்காக சுப்பிரமணியன் பைக்கில் சூரங்குடி சென்றார். மாலை வாங்கிவிட்டு வந்தபோது சூரங்குடி மின்வாரிய அலுவலகம அருகே எதிர்பாரதவிதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து பைக் விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த  சுப்பிரமணியன் தூத்துக்குடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து தொடர்பாக சூரங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயின் இறுதிச் சடங்கிற்காக மாலை வாங்கச் சென்ற மகன் பைக் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

பொன்குமார்Dec 4, 2018 - 05:23:24 PM | Posted IP 162.1*****

தலைப்பில் சாலைப்பணியை சரியாக மேற்கொள்ளாத அரசு மீது உள்ள குறையை சுட்டிக்காட்டாமல் திசை திருப்புவது வேடிக்கையாக உள்ளது...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory