» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ள இடங்கள் : கன்னியாகுமரி மாவட்டஆட்சியர் அறிவிப்பு

செவ்வாய் 20, நவம்பர் 2018 6:14:03 PM (IST)

தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் ஐந்தாம் கட்ட சிறப்பு முகாம் 23.11.2018 வெள்ளிக்கிழமை அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களில் கீழ்கண்டவாறு நடைபெறவுள்ளது.

அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் நீண்டகரை ஏ கிழக்கு வருவாய் கிராமத்திற்கு மட்டும், கன்கார்டியா மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவிலில் வைத்தும், தோவாளை வட்டத்தில் தடிக்காரன்கோணம் வருவாய் கிராமத்திற்கு மட்டும், சமூக நலக்கூடம், தடிக்காரன்கோணத்தில் வைத்தும், கல்குளம் வட்டத்தில்; கண்ணனூர் வருவாய் கிராமத்திற்கு மட்டும், புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளி, முளவிளையில் வைத்தும், விளவங்கோடு வட்டத்தில் உண்ணாமலைக்கடை வருவாய் கிராமத்திற்கு மட்டும், அரசு உயர்நிலைப்பள்ளி காஞ்சிரங்கோட்டில் வைத்து வரும் 23ம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்த அம்மா திட்டம் ஐந்தாம் கட்ட சிறப்பு முகாமில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வருவாய் வட்டாட்சியர் அதிகாரத்திற்குட்பட்ட நில தாவாக்கள், குடிநீர் மற்றும் சாலை வசதி போன்ற பொதுவான மனுக்களை பொதுமக்கள் அளித்து தீர்வு காணலாம் எனவும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்வடநேரே வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory