» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கொற்றிக்கோடில் மணல் கடத்தியதாக 2 பேர் கைது

செவ்வாய் 20, நவம்பர் 2018 5:32:12 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் கொற்றிக்கோடு பகுதியில் மணல் கடத்தியது தொடர்பாக 2 பேரை கைது செய்யப்பட்டு 3 லாரிகள் பறிமுதல் செய்ய்பபட்டது.

குமரி மாவட்ட மணல் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் மற்றும் போலீசார் நேற்று கொற்றிக்கோடு பகுதியில் ரோந்து சென்றனர்.அவர்கள் சித்திரங்கோடு பகுதியில் வரும்போது அந்த வழியாக லாரி ஒன்று வேகமாக வந்தது. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஆற்று மணல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாரியில் மணல் கொண்டு வருவதற்கான ஆவணங்களை சரிபார்த்தனர். 

மணல் கொண்டு வருவதற்கான எந்த ஆவணமும் இல்லை. மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். டிரைவர் ராஜேந்திரன் (வயது 54), ரெஜிகுமார் (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொக்கோட்டான் பாறை பகுதியில் இருந்து கொண்டு வருவது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory