» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் பலத்த மழை

செவ்வாய் 20, நவம்பர் 2018 5:27:25 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் சுருளோட்டில் அதிகபட்சமாக 28 மிமீ மழை பெய்துள்ளது.

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில் நேற்றிரவு கன்னியாகுமரி, கொட்டாரம், மயிலாடி, சாமித்தோப்பு, சுருளோடு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சுருளோட்டில் அதிகபட்சமாக 28 மி.மீ. மழை பதிவானது. 

கொட்டாரம், சாமித்தோப்பு, கன்னியாகுமரி பகுதியில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. திடீரென பலத்த மழை கொட்டி தீர்த்தது. சுமார் 1 மணி நேரமாக கனமழை பெய்தது. சுசீந்திரம், நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, குலசேகரம், திற்பரப்பு, முள்ளங்கினாவிளை, அடையாமடை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory