» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு பெண் பலி

செவ்வாய் 20, நவம்பர் 2018 2:11:24 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு மூதாட்டி பலியானார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களாக பன்றி காய்ச்சல் நோய் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது.பன்றி காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறை அதிகாரிகளும் கடும் நடவடிக்கை எடுத்தனர்.  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் உள்ள பன்றி காய்ச்சல் வார்டில் 14 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  

நாகர்கோவில், ராணித்தோட்டம், தடி டெப்போ பகுதியை சேர்ந்த மூதாட்டி கமலம் (70) என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பன்றி காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நோய் முற்றிய நிலையில் சிகிச்சை பலனின்றி கமலம் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இவரையும் சேர்த்து குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory