» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தக்கலை அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி

ஞாயிறு 18, நவம்பர் 2018 12:53:46 PM (IST)

தக்கலை அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் பலியானதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள ஈத்தவிளை, தோட்டத்துவிளையை சேர்ந்தவர் ஈசாக். இவருடைய மனைவி செல்வி மனோகர பாய் (58). இவர் தனது மகன் ஸ்டாலின் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த வாரம் செல்வி மனோகரபாய் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அழகியமண்டபம், தக்கலை ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். ஆனால், காய்ச்சல் குணமாகவில்லை. 

இதையடுத்து மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செல்வி மனோகரபாய் பரிதாபமாக இறந்தார்.மர்ம காய்ச்சலில் பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory