» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பூதப்பாண்டி அருகே மாடியிலிருந்து விழுந்த பெண் பலி

சனி 17, நவம்பர் 2018 6:00:45 PM (IST)

பூதப்பாண்டி அருகே வலிப்பு நோயால் பெண் மாடியிலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

பூதப்பாண்டி அருகே அருமநல்லுாரை சேர்ந்தவர் கோகிலா. இவருக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று மாடியில் துணிகளை காயப்போட்டு கொண்டிருந்தாராம்.அப்போது திடீரென அவருக்கு வலிப்பு வந்துள்ளது. யாரும் இல்லாததால் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார் .

இதில் படுகாயம் அடைந்த அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் . ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கோகிலா உயிரிழந்தார். இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory