» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கஜா புயல் எதிரொலி ‍: கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை

வியாழன் 15, நவம்பர் 2018 12:35:28 PM (IST)

கஜா புயல் எதிரொலியாக குமரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. 

வங்கக்கடலில் உருவான கஜா புயல் இன்று மாலை கடலூர்-பாம்பனுக்கு இடையே கரையை கடக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. கஜா புயல் காரணமாக குமரி மாவட்டத்திலும் பரவலாக மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் நேற்று மாலை மற்றும் இரவில் விட்டு விட்டு மழை பெய்தது. முக்கடல் அணை பகுதியில் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. 

அங்கு அதிகபட்சமாக 64.7 மி.மீ. மழை பதிவானது. பூதப்பாண்டி, சுருளோடு, ஆணைக்கிடங்கு, அடையாமடை, புத்தன் அணை மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று காலை நிரம்பி வழிந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory