» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பள்ளிக்குள் புகுந்து மாணவிகளுக்கு அரிவாள் வெட்டு : அரசு பேருந்து ஓட்டுனர் கைது

புதன் 14, நவம்பர் 2018 8:40:51 PM (IST)

அருமனை அருகே பள்ளிக்குள் புகுந்து 2 மாணவிகள் உள்பட 4 பேரை அரிவாள் வெட்டிய அரசு பேருந்து ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள சிதறாலில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் தங்கி படிக்க விடுதி உள்ளது. இன்று சிதறால் பகுதியை சேர்ந்த அரசு பேருந்து டிரைவர் ஜெயன் ( 49) என்பவர் இந்த பள்ளிக் கூடத்திற்குள் புகுந்து மாணவிகள் தங்கும் விடுதிக்கு சென்று அங்கு ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்தார். 

மேலும் அங்கு இருந்த பொருட்களையும் சேதப்படுத்தினார். அப்போது விடுதியில் தங்கி இருந்த திற்பரப்பு பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவிகள் வர்ஷா, நந்தினி ஆகியோர் இதை பார்த்து பயந்துபோய் ஓட்டம் பிடித்தனர். உடனே அவர்கள் இருவரையும் ஜெயன் அரிவாளால் வெட்டினாராம். இதில் அந்த மாணவிகளுக்கு கையில் ரத்தம் கொட்டியது.

இதனால் மாணவிகளின் கூச்சல் சத்தம் கேட்டு பள்ளியின் மேலாளர் ஞானமுத்து வந்து ஜெயனை தடுக்க முயன்றார். இதனால் அவரையும் ஜெயன் அரிவாளால் வெட்டினார். அதன்பிறகு பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த 3 பள்ளிக்கூட பேருந்துகளின் கண்ணாடிகளையும் அவர் உடைத்தார். இதற்கிடையில் பள்ளிக்கூடத்தில் நடந்த அசம்பாவிதங்களை அறிந்த அந்த பகுதி மக்கள் பள்ளிக்கூடத்தில் திரண்டனர். மேலும் சுதீர் (50) என்பவர் ஜெயனை பிடிக்க முயற்சி செய்தபோது அவரையும் வெட்டிவிட்டு தப்பி செல்ல முயன்றார். 

உடனே பொதுமக்கள் ஜெயனை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பிறகு அவரை அருமனை போலீசில் ஒப்படைத்தனர்.அருமனை போலீசார் ஜெயனை கைது செய்தனர். மேலும் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த 2 மாணவிகள் உள்பட 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory