» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மண்டைக்காட்டில் மருமகள் தாக்கியதில் மாமியார் காயம்

வெள்ளி 9, நவம்பர் 2018 7:25:23 PM (IST)

மண்டைக்காடு பகுதியில் நடைபெற்ற குடும்ப தகராறில் ஏற்பட்ட மோதலில் பெண் படுகாயம் அடைந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே அழகன்பாறை காட்டுவிளையை சேர்ந்த தமிழ்செல்வராஜன் மற்றும் செந்தில் இருவரும் சகோதரர்கள். இவர்களின் தந்தை சமீபத்தில் இறந்து விட்டாராம்,அவர் இருக்கும் போது செந்திலின் மனைவி சொத்தில் பிரச்சனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இவரது மாமியார் ஜெயராணி சம்பவத்தன்று தேங்காய் பறித்து கொண்டிருக்கையில் செந்தில் மனைவி பிரபா தேங்காய் கேட்டதாகவும் அதற்கு அவர் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் கோபமான பிரபா தேங்காயால் தாக்கியதில் ஜெயராணி படுகாயம் அடைந்தார். இது குறித்து ஜெயராணி அளித்த புகாரின் பேரில் மண்டைக்காடு போலீசார் பிரபா மீது வழக்கு பதிந்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory