» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கடன் பிரச்சனை காரணமாக தொழிலாளி தற்கொலை

வெள்ளி 9, நவம்பர் 2018 5:29:21 PM (IST)

தக்கலை அருகே கடன் பிரச்சனை காரணமாக வி‌ஷம் குடித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த திருவிதாங்கோடு, அண்ணா நகர் காலனியை சேர்ந்த செந்தில்குமார் (42). கூலி தொழிலாளி. இவருக்கு லதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் செந்தில்குமார் மது பழக்கத்திற்கும் அடிமையானார். லதா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர்களுக்கு இடையேயும் பிரச்சனை ஏற்பட்டது.

இந்நிலையில் சம்பவத்தன்று செந்தில்குமார் மனைவியுடன் தகராறு செய்துவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கு இரவு தங்கினார். நள்ளிரவில் அவர் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடப்பதை கண்ட உறவினர்கள் இது பற்றி செந்தில்குமாரின் மனைவியிடம் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து செந்தில்குமாரை தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். 

அங்கு செந்திலை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது பற்றி செந்தில் குமாரின் மனைவி தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் செந்தில் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory