» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மத்தியஅரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

வெள்ளி 9, நவம்பர் 2018 12:24:14 PM (IST)
நாகர்கோவிலில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கடந்த 2016 ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி இரவு 500 மற்றும் 1000ரூபாய்கள் இனி செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் நாகர்கோவிலில் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்தும்.பண மதிப்பிழப்பின் மூன்றாமாண்டு துவக்க நாளான இன்று காங்கிரசார் கறுப்பு தினமாக அனுசரித்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ்,  நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் உட்பட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory