» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இளம்பெண்ணை ஆபாசபடம் எடுத்து மிரட்டி பலாத்காரம் : வாலிபர் கைது

வெள்ளி 9, நவம்பர் 2018 11:55:08 AM (IST)

குளச்சல் அருகே இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டி கற்பழித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அடுத்த மண்டைக்காடு புதூர் பகுதியை சேர்ந்தவர் சகாய பிரதீஷ்டன் ( 22).இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மண்டைக்காடு புதூரில் இவரது வீடு அருகே இளம்பெண் ஒருவர் வசித்து வந்தார். அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அந்த பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.

சகாய பிரதீஷ்டன் சென்னையில் இருந்து விடுமுறையில் ஊருக்கு வரும்போது, அந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. சமீபத்தில் சகாய பிரதீஷ்டன் விடுமுறையில் ஊருக்கு வந்தார். அவர் அந்த பெண்ணை சந்திக்க சென்றார். அப்போது அந்த பெண் வீட்டின் குளியலறையில் இருந்து வெளியே வந்தார்.அதனை சகாய பிரதீஷ்டன் தனது செல்போனில் படம் பிடித்து  பின்னர் அந்த படத்தை பெண்ணிடம் காட்டி அதனை பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன அந்த பெண்ணை சகாய பிரதீஷ்டன் பாலியல் பலாத்காரம் செய்தாராம். சமீபத்தில் அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்துள்ளார். ஆனால் தொடர்ந்து பிரதீஷ் அப்பெண்ணை வற்புறுத்தி வந்துள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த சகாய பிரதீஷ்டன், அந்த பெண்ணுடன் எடுத்து கொண்ட ஆபாச படங்களை அவரது கணவர் மற்றும் உறவினர்களுக்கு சமூக வலை தளம் மூலம் அனுப்பினார். அதனை பார்த்த உறவினர்கள் மற்றும் கணவர் அதிர்ச்சி அடைந்தனர்.உடனே அவர்கள் இது பற்றி குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி, சப்-இன்ஸ்பெக்டர் பொன். கீதா ஆகியோர் புகார் மீது விசாரணை நடத்தினர்.பின்னர் இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டி கற்பழித்ததாக சகாய பிரதீஷ்டனை கைது செய்தனர். 


மக்கள் கருத்து

அருண்Nov 9, 2018 - 10:02:22 PM | Posted IP 157.5*****

கல்யாணம் ஆனா புருசனும் பொஞ்சாதியும் சேந்தே இருக்கணும் இல்லனா இப்படித்தான்... எவனாச்சும் உள்ள நொழைஞ்சுடுவான்... இத சொல்ல போனா நம்மள திட்டுவானுங்க...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory