» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மார்த்தாண்டம் மேம்பாலத்தை பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு

வெள்ளி 9, நவம்பர் 2018 11:03:28 AM (IST)
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நாளை பொதுமக்கள் நடந்து சென்று பார்வையிட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

தேசிய நெடுஞ்சாலையில், வெட்டுவெந்நி குழித்துறை ஆற்றுப் பாலம் முடியும் இடத்தில் தொடங்கி மார்த்தாண்டம் அருகே பம்மம் பகுதி வரை 2.4 கி.மீ. தொலைவுக்கு ரூ. 142 கோடியில் மார்த்தாண்டம் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பாலம் தமிழகத்தின் முதல் இரும்பு பாலமாகவும், தென்னிந்தியாவின் மிக நீளமான இரும்பு பாலமாகவும் அமைகிறது. பெரும்பாலான பணிகள் முடிந்து விட்ட நிலையில், பாலத்தின் அடிப்பகுதி தரைத்தளம் பகுதியில் தரைவழி மின் இணைப்புக்கான மின்மாற்றிகள் பொருத்தும் பணி உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன.

இதற்கிடையே மேம்பாலத்தின் மேற்பகுதி சாலைப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து நாளை (நவ. 10) மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் மேம்பாலத்தின் மேல் நடந்து சென்று பார்வையிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில், அதிகளவு பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாகனப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory